தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

தமிழக அரசின் ஆலோசகரான பவன் ரெய்னா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பவன் ரெய்னா ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், டெல்லி பொலிசார் ரகசிய விசாரணை நடத்தியதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com