Dec 20, 2016
6 Views
0 0

தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசரின் மகன் குடிபோதையில் போலீசாருடன் தகராறு

Written by
banner

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் சென்னையில் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், ராகேஷ், 40. பாரத ஸ்டேட் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், ஞாயிறன்ற இரவு பணி முடிந்து, வீட்டிற்கு அண்ணாநகர் – 2வது அவென்யூ வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த, சூப்பர் மார்க்கெட் அருகே சென்ற போது, நான்கு வாலிபர்கள், ராகேஷை வழிமறித்து, தாக்கி உள்ளனர். உடனே அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார், மேலாளரை தாக்கிய, நான்கு பேரையும், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசருடைய மகன் விஷ்ணு மற்றும் அவரது நண்பர்கள் என, தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரும், சாதாரண வழக்குப்பதிவு செய்து, அவர்களை விட்டு விட்டனர்.

Article Categories:
தமிழகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com