தமிழக பிஜேபியின் தலைவராக ரஜினி அமர்வார் என்று சொல்லப்படுகிறது

ரஜினி பி.ஜே.பியில் இணையப் போகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா,  பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். ரஜினியும் மார்ச் மாதம் ஒரு மாநாட்டை கூட்டி பார்க்க வேண்டும் என்று முடிவில் உள்ளார்.

எல்லாம் சரியாக இருந்தால் தமிழக பிஜேபியின் தலைவராக ரஜினி அமர்வார் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிக்கும் அரசியல் ஆசை இல்லாமல் இல்லை. ஆனாலும், யாரை நம்பி இறங்குவது, கை காசை செலவு செய்வதா? என்றெல்லாம் யோசித்தே காலங்களை கடத்திய ரஜினிக்கு இப்போ வாய்ப்பு வீடு தேடி வருகிறது.

அதை பயன்படுத்தாமல் விட்டு விடப்போவதில்லை தலைவர் என்கிறார்கள் ரஜினி ரசிகர் மன்ற தலைவர்கள். எப்படியோ, ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை ஆரம்பமாகி விட்டதாம்.

தமிழகத்திற்கு யாரும் தலைவர்கள் இல்லை என்ற நிலையில், ரஜினி தலைமையில் பிஜேபி என்றால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்று ஆசைப்பட்டு கொண்டு இருக்கின்றனர் பிஜேபியினர்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com