தானிப்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது

திருவண்ணாமலை, மே 20:

தி.மலை மாவட்டம் தானிப்பாடி அருகே கள்ளச்சாராயம்
விற்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தானிப்பாடி
போலீஸ் எஸ்.ஐ. சிவசங்கர் தலைமையில் போலீசார் கடந்த 16ந் தேதி கள்ளச்சாராய
பேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தானிப்பாடி அருகே புளியம்பட்டி
கிராமத்திலுள்ள பாபு (35) , ஆண்டி (45) ஆகியோரது வீடுகளின் பின்புறம்
கள்ளச்சாராயம் இருப்பது தெரியவந்தது. உடன் அவர்களிடமிருந்து தலா 60
லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்ததோடு அவர்களையும் கைது செய்து
விசாரித்து வருகிறார்.

You might also like More from author