Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news தினகரன் உண்மையை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது - Naangamthoon

தினகரன் உண்மையை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் உண்மையை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் போது தனக்கு சுகேசை முன்பே தெரியும் என தினகரன் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு வரை சுகேசை தனக்கு யார் என்றே தெரியாது என தினகரன் கூறி வந்த தினகரன் நேற்று நடந்த விசாரணையின் போது, சுகேசை எனக்கு முன்பே தெரியும். அவரை உயர் நீதிபதி என நினைத்து பேசினேன் என தினகரன் கூறி உள்ளதாக கூறப்படுகிறது.

சுகேசுடன் தனக்கு தொடர்பு இருப்பதை தினகரன் ஒப்புக் கொண்டுள்ளதால், தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேசை அளித்துள்ள வாக்குமூலம் உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கு டெல்லி பொலிஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

You might also like More from author