திருச்சியில் ஜி .கே .வாசன் பேட்டி

திருச்சியில் திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக த .ம .க .தலைவர் ஜி .கே .வாசன்வந்தார் .அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழக அரசு கடன் சுமையால் தவித்து வருகிறது.

பஸ் ஊழியர்கள் நிலுவை தொகை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு அதுவே காரணம் அரசின் மெத்தனப்போக்கால் பஸ் வசதியின்றி பொது மக்கள் 2நாட்களாக அவதியுற்றனர் .எஸ்மா சட்டத்தைக்காட்டி பஸ்  ஊழியர்களை ஒடுக்க முயலாமல் அவர்களது  பிரச்சனைகளை  தீர்க்க  அரசு  முன் வர வேண்டும் ..சில குறிப்பிட்ட துறைகள் செயல் படாமல் உள்ளன .பெரிய தொழில் நிறுவனங்கள்  வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன .தொழில்துறை மோசமான சூழலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட வேண்டும் .சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தை உடனே கூட்டினால்தான் பல்வேறு துறைகளின்  வளர்ச்சிக்கு வழி  பிறக்கும்   ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்த ஒற்றுமை  நீட் தேர்வு  விவகாரத்தில் இல்லை .தமிழகஅரசு மத்தியஅரசுக்கு  அழுத்தம்  தரவேண்டும் .முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப .சிதம்பரம் வீட்டில் சி பி ஐ நடத்திய சோதனை குறித்த உண்மையான  விவரங்களை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியது  மத்திய அரசின்  கடமை .நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தலைவர்களின் அன்பை பெற்றவர் ,நட்பு அடிப்படையிலும் ,மரியாதை நிமித்தமாகவும் பலர் சந்திக்கலாம் .ஆனால் இவை அனைத்தையும் ரஜினி புரிந்து வைத்திருப்பார் .இளைஞர்கள்  மது ,புகை ப்பழக்கத்தை என்று அவர் கூறியிருப்பது  வரவேற்கத்தக்கது ,உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் ,அதிகாரிகள் ஆட்சி செய்வதை  மக்கள்  விரும்பமாட்டார்கள்,,கோரிக்கைகளை  வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் ஒருமாதத்தில்  நிறைவேற்றுவோம்  என்று கூறியிருந்தனர் , ஆனால்  அவர்களை  பற்றி
 அரசு  கவலைப்பட்டதாக  தெரியவில்லை ,அவர்களின் நம்பிக்கை  வீண் போகாத வகையில்  அரசு  செயல்  பட வேண்டும் .இவ்வாறு  கூறினார் ,அப்போது நிர்வாகிகள் நந்தா செந்தில்வேல் ,டி ,குணா .ரவீந்திரன் , புலியூர் நாகராஜன் ,கே .டி .தனபால் ,, இன்டர்நெட் ரவி ,உள்ளிட்டோர்  உடனிருந்தனர்

You might also like More from author