திருவண்ணமலை அருகே இளம் பெண் பலி

திருவண்ணாமலை, மே.22:

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே சேலையில்
தீ பிடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது குறித்தது போலீசார் விசாரித்து
வருகிறார்கள். தச்சம்பட்டு அருகே வேளையாம்பாக்கம் கிராமத்தைச்
சேர்ந்தவர் ராஜேஸ்வரி (25). இவரது கணவர் ஜெயபிரகாஷ் (28). விவசாய கூலியாக
வேலை செய்து வருகிறார். ராஜேஸ்வரி கடந்த 14ந் தேதி தனது குழந்தையை
குளிக்க வைக்க வென்னீர் போட மண்ணெண்ணை ஸ்டவ்வினை பற்ற வைத்த போது திடீரென
அவரது சேலையில் தீ பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால்
எரிச்சல் தாங்காமல் ராஜேஸ்வரி சத்தம் போட அக்கம் பக்கத்தினர்
சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்
நேற்று முன் தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து
தச்சம்பட்டு எஸ்எஸ்ஐ நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

You might also like More from author