திருவண்ணாமலை அருகே சிறுமி மீது தாக்குதல் தனியார் விடுதி மீது போலீசில் புகார்

திருவண்ணாமலை ஜன 7: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பங்காரப் பள்ளி
தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா, இவரது மகள் ராதிகா (14) இவர் கடந்த 8
ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு
முன்பு திருவண்ணாமலை அருகே உள்ள அசுவநாதசுரணை கிராமத்தில் உள்ள ஒரு
தனியார் விடுதியில் ராதிகாவை சேர்த்தனர். கடந்த 28ந் தேதி இரவு விடுதி
நிர்வாகி சரண்யா ராதிகாவின் பெற்றோருக்கு போன் செய்து உங்கள் மகளுக்கு
உடல்நிலை சரியில்லை உடனே விடுதிக்குவரும்படி கூறியுள்ளார். இதனால்
பெற்றோர் அங்குசென்று பார்த்தபோது ராதிகாவின் வலது கன்னம், மார்பு,
உள்ளங்கை ஆகிய இடங்களில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே ராதிகா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
அனுப்பப்பட்டார்.  இதுகுறித்து ராதிகாவின் தாயார் சித்ரா திருவண்ணாமலை
கிராமிய காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதில் தனது மகளை
விடுதியில் உள்ளவர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டுமென கூறியுள்ளார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் மீனா வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com