திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ. 5 கோடிக்கு மது விற்பனை

திருவண்ணாமலை, ஜன. 4 : திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 286 அரசு டாஸ்மாக்
கடைகளில் ஆங்கில புத்தாண்டையொட்டி கடந்த 31ந் தேதி ரூ. 2 கோடியே 78
லட்சத்து 56 ஆயிரத்து 166க்கு மதுபானங்கள் விற்பனையானது.
இதேபோல் ஆங்கில புத்தாண்டு அன்று முன்தினம் ரூ. 2 கோடியே 61 லட்சத்து 13 ஆயிரத்து
916க்கு மது வகைகள் விற்பனையானது. இதில் 4 ஆயிரத்து 924 பெட்டிகள்
விஸ்கி, ரம் உள்ளிட்ட மது வகைகளும், 2,086 பெட்டிகள் பீர் பாட்டில்களும்
விற்பனை ஆனது.
கடந்த ஆண்டு 31ந் தேதியும், இந்த புத்தாண்டு 01ந் தேதியும்
மட்டும் விற்பனையான மொத்த மதுபானங்களின்மதிப்பு ரூ. 5 கோடியே 39 லட்சத்து
70 ஆயிரத்து 82 என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். இது கடந்த
ஆண்டைவிட ரூ. 52 லட்சம் அதிகமாகும். தற்போது நிலவிவரும்
பணத்தட்டுப்பாட்டிலும் விற்பனை அதிகரித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com