திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டடியல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார் மாவட்டத்தில் 19,58,580 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவண்ணாமலை ஜன 7:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2017ஆம்
ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த்
எம்.வட்நேரே நேற்று வெளியிட்டார்.

மாவட்டத்தில் கடந்த 01-09-16 முதல் 30-09-16 வரையிலான நாட்களில்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம்
செய்யக் கோரி 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பெறப்பட்ட படிவங்களை அடிப்படையாக
கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் 2017ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார். இதன்படி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 19,58,580
வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9,64,840ம், பெண்
வாக்காளர்கள் 9,93,697ம், இதர பிரிவினர் 43 வாக்காளர்களும் உள்ளனர். இந்த
இறுதி வாக்காளர் பட்டியலில் 56,996 புதிய வாக்காளர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைத்து
கட்சியினை சேர்ந்தவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி,
கோட்டாட்சியர் உமாமகேஷ்வரி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இறுதி
வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியல் பொது மக்களின்
பார்வைக்காக கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்
நகராட்சி அலுவலகம், தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்படும்
என ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com