தீபாவுக்கு ஆதரவு முந்துகிறது கரூரில்

கரூர் மாவட்டத்தில்

தீபாவுக்கு அதிகரித்து வரும் ஆதரவால்  அ.தி.மு.க வினர் கலக்கத்தில் உள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து, மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே, குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில், தீபாவை ஆதரித்து பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் கரூர் நகரில்  முன்னாள்  எம்.எல்.ஏ  திருச்சி சவுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலரது பெயரில், தீபாவை ஆதரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. சென்னையில் அ.தி.மு.க பொதுக்குழு 29ல் கூட உள்ளது. கரூர் எம்.பி யும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, சசிகலாவுக்கு ஆதரவாக முன்னின்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில்  கரூர் மாவட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் பெயரில்  தீபாவை ஆதரித்து போஸ்டர், பேனர்கள் வைக்கப்பட்டு வருவது, மாவட்டம் மற்றும் மாநில நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது

You might also like More from author