தீவிரவாதிகள் சரணடைய ஹெல்ப் லைன் – பெருகிவரும் வரவேற்பு!

காஷ்மீரில் தீவிரவாதிகள் சரணடைய ஹெல்ப் லைன் திட்டத்துக்கு பெருகிவரும் வரவேற்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதங்களை கைவிட்டு தீவிரவாதிகள் சரணடைவதற்காக 1441 என்ற எண் கொண்ட தொலைபேசி உதவி மையம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

சரண் அடைய விரும்புவர்கள் மட்டுமின்றி, தீவிரவாதம் என்னும் தீய நோக்கத்தின் பக்கம் தங்களது குடும்பத்தினர் செல்வதை அறியவரும் உறவினர்களும் இந்த எண்ணை தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஹெல்ப் லைன், கடந்த 4 மாதங்களாக தினந்தோறும் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது.

மத்திய துணை ராணுவப் படையின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த மையத்துக்கு இதுவரை சுமார் 70 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாகவும், பலன் அளிக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளதாகவும் மத்திய துணை ராணுவப் படை ஐ.ஜி. துல்பிகார் ஹஸன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், தாயின் கண்ணீரை கண்ட காஷ்மீர் கால்பந்து வீரர் மஜீத் கான் என்பவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இருந்து விலகி சரண் அடைய இந்த உதவி மையம் துணையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like More from author