தீ விபத்தால் வீடு இழந்தவர்களுக்கு முன்னாள் அமைசசர் எ.வ.வேலு எம்எல்ஏ நிவாரண உதவிகள் வழங்கினார்

திருவண்ணாமலை, ஏப் 28:

திருவண்ணாமலை ஒன்றியத்துக்குட்பட்ட
மேல்கச்சிராப்பட்டில் நடந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டு வீடு
இழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,எம்.எல்.ஏ., தனது சொந்த
நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் வேட்டி, புடவைகள், அரிசி உட்பட
நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சாலை, சாரோனிலுள்ள மாவட்ட திமுக
அலுவலகத்தில், தீ விபத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு நிவாரண
உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேல்கச்சிராப்பட்டு
கிராமத்தை சேர்ந்த வி.கோவிந்தராஜ், கா.இந்திரா ஆகியோரது வீடுகள் தீ
விபத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்தது. இவர்களின் குடும்பங்களுக்கு
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ.,  தனது சொந்த நிதியிலிருந்து,
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 ஆயிரம், புடவை, வேட்டிகள், அரிசி
மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை
செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், ஒன்றிய செயலாளர் த.ரமணன், நகர
செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம்,
ஒன்றிய செயலாளர் சி.மாரிமுத்து, இர.செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத்
தலைவர் முத்துக்குமார், தொண்டர் அணி கலைராஜா, ஏ.ஏ.ஆறுமுகம், உட்பட
ஏராளமானோர் உடன் இருந்தனர்

You might also like More from author