துணை நடிகை ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்

சென்னை மதுரவாயலில் துணை நடிகை ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரவாயல், அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் சங்கீதா (வயது 33).

கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சங்கீதாவின் மகன் அவரது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் சங்கீதா மட்டும் இருந்துள்ளார்.

பாட்டி வீட்டுக்கு சென்ற சங்கீதாவின் மகன் தனது பலமுறை போன் செய்துள்ளார். ஆனால், சங்கீதாவிடம் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சங்கீதா தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

போலிசார், சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து போலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like More from author