தேசிய கீதத்தை அவமதித்தாரா கோஹ்லி.. வெடித்த சர்ச்சை

இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி தேசிய கீதத்தை அவமதித்துள்ளதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது. தேசிய கீதம் பாடும் போது அவர் பபுள் கம் மென்ற வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் நேற்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடத்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நடந்து இருக்கிறது. இதனால் கோஹ்லி பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். சமூக வலை தளங்களில் பலர் கோஹ்லிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றும்கூறியுள்ளனர்.

கொல்கத்தாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் பேட்டிங் இதில் மிகவும் மோசமாக இருந்தது. கோஹ்லி வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியே சென்றார். தொடர் சாதனைகளை படைத்து வரும் கோஹ்லி இதிலும் சாதனை படைத்து உள்ளார். நேற்று டக் அவுட் ஆனதன் மூலம் இவர் முன்னாள் கேப்டன் கபில் தேவின் டக் அவுட் சாதனை சமன் செய்தார். சாதனை மட்டும் இல்லாமல் நேற்று நடந்த போட்டியில் அவர் இன்னொரு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு நேற்று இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர். ஆனால் அப்போது கோஹ்லி தேசிய கீதம் பாடாமல் வாயில் பபுள் கம் வைத்து மென்று இருக்கிறார். இது தற்போது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் தேசிய கீதத்தை அவமதித்ததாக எழும் சர்ச்சை இதற்கு முன்பும் ஒருமுறை நடந்து இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்திய அணிக்கு அறிமுகம் ஆனா ‘பர்வேஸ் ரசூல்’ என்ற வீரர் இந்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவரும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது பபுள் கம் மென்றார். அப்போது இவர் மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வந்தது. தற்போது கோஹ்லி மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் என்று சிலர் டிவிட்டரில் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கோஹ்லியின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேப்டனாக இருந்து கொண்டு கோஹ்லி இப்படி செய்யலாமா என்று கேட்டுள்ளனர். இவர் கோஹ்லியிடம் ”என்ன இது. நீங்கள் இந்தியாரா..?” என்று கோவமாக கேட்டு இருக்கிறார்.

You might also like More from author