அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்ட துவக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.

தடுப்புசிதிட்டம் தொடர்பாக மாணவர்கள் கார்த்திகேயன்,பரமேஸ்வரி,காயத்ரி,ஜெகதீஸ்வரன் உட்பட பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கமலேஸ்வரன் மாணவர்களுக்கு தடுப்பூசியை போட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.

திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தமீம் அன்சாரி,சண்முகநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுதா , தேவகோட்டை அக்பர் தெரு அங்கன்வாடி உதவியாளர் சரளா ஆகியோர் மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பாக எடுத்து சொல்லி ஊசி போடுதல் அமைதியான முறையில் நடைபெற்றது.நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்ட துவக்க விழாவில் தேவகோட்டை வட்டார மருத்துவர் கமலேஸ்வரன் தடுப்பூசியை போட்டு துவக்கி வைத்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளார்.

You might also like More from author