நகைக்கடை ஒன்றின் மேற்கூரையை துளையிட்டு 60 கிலோ எடையுள்ள தங்கத்தை கொள்ளையிட்டுள்ளர்

தமிழ்நாட்டில் நகைக்கடை ஒன்றின் மேற்கூரையை துளையிட்டு 60 கிலோ எடையுள்ள தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாயங்ககுறிச்சிக்கு அருகே உள்ள முருகன்குறிச்சியில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தப்பகுதியில் அழகர் ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் நகைக்கடையின் மேற்கூரை வழியாக துளையிட்டு உள்ளே குதித்த கொள்ளையர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பலவிதமான நகைகளை அள்ளிச்சென்றுள்ளனர்.

மேலும், பொலிசாரிடம் இருந்து தப்பிக்க நகைக்கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவை உடைத்து விட்டு கொள்ளையர்கள் தப்பியுள்ளனர்.

மர்ம நபர்கள் கொள்ளையிட்ட தங்க நகையின் எடை 60 கிலோ எனவும், இதன் சந்தை மதிப்பு சுமார் 16 கோடி வரை இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நகைக்கடைக்கு அருகே புதிதாக கட்டிடம் கட்டும் வேலை நடைப்பெற்று வருவதால் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு இதில் தொடர்புள்ளதா எனப் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நகைக்கடைக்கு அருகே உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள கமெராவில் 4 பேரின் முகங்கள் பதிந்துள்ளதாகவும் இவற்றை பயன்படுத்தி கொள்ளையர்கள் தேடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

You might also like More from author