நடிகர் அரவிந்தசாமி தமிழக மக்களுக்கு கோரிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுயுள்ளார்

பிரபல நடிகர் அரவிந்தசாமி தமிழக மக்களுக்கு கோரிக்கை ஒன்றை தனது சமூக வலைத்தளத்தின் மூலம் வைத்துள்ளார்.

தமிழக மக்கள் உடனடியாக தங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களையோ, அல்லது உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகளையோ தொடர்பு கொண்டு யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற தங்களுடைய கருத்தை உடனே தெரிவிக்க வேண்டும் என்றும், மக்களின் விருப்பத்தை அறிந்து ஜனநாயகப்படிதான் முதல்வர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரவிந்தசாமியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

You might also like More from author