நடிகர் கருணாஸ் சசிகலா அணியை ஆதரிக்க ரூபாய் வங்கியதாக வெளியாகியுள்ளது

நடிகர் கருணாஸ் சசிகலா அணியை ஆதரிக்க 5 கோடி ரூபாய் வங்கியதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல திரைப்பட நடிகரும் மற்றும் எம்எல்ஏவுமான கருணாஸ் அண்மையில் முக்குலத்தோர் புலிப்படையின் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை கருணாஸ் பற்றி சில அதிர்ச்சி தரும் தகவல்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதில்,கூவத்தூர் பங்களாவில் கருணாஸ் இருந்தபோது புலிப்படையின் நிர்வாகிகளை அழைத்ததாகவும், அவர்களுக்கு சசிகலா தரப்பினர் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் தன்னுடைய கடனை அடைத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் கருணாஸ் உண்மையில் ஐந்து கோடி ரூபாய் பெற்றதாகவும், அதை மறைத்துவிட்டு தங்களிடம் ஒருகோடி ரூபாய் தான் பெற்றேன் என்று கருணாஸ் பொய் கூறியுள்ளார் என்று பாண்டிதுரை தெரிவித்துள்ளார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com