Home சினிமா நடிகர் தனுஷ்க்கு மின்சார வாரியம் அபராதம் விதிக்கப்பட்டது

நடிகர் தனுஷ்க்கு மின்சார வாரியம் அபராதம் விதிக்கப்பட்டது

29

நடிகர் தனுஷ் பயன்படுத்திய கேரவனுக்கு மின்சாரம் திருட்டுதனமாக எடுக்கப்பட்டதையடுத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றார்.

அவர்கள் ஓய்வெடுப்பதற்காக ஒரு கேரவனும் வந்திருந்தது. அதை கோயில் அருகிலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.

கேரவனுக்கு தேவையான மின்சாரத்தை அருகிலிருந்த ஒரு தெருவிளக்குக்கு வைக்கப்பட்டுள்ள மீட்டர் பெட்டியில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்துள்ளனர்.

இது குறித்து மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகள் குறித்த கேரவன் வாகனத்தை பறிமுதல் செய்தார்கள்.

மேலும், 15,731 ரூபாய் மின் கட்டணமும், 60 ஆயிரம் அபராதமும் விதித்தார்கள். இந்த பணம் தனுஷ் தரப்பில் செலுத்தப்பட்ட பின்னர் கேரவன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.