நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ: டுவிட்டரில் வெளியிட்டார் ஷங்கர்

சென்னை,

ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் கதாநாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் இயக்கி உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது.

ரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் ஒரு நகரையே அரங்கில் உருவாக்கி பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி உள்ளனர். பாகுபலி படத்துக்கு இணையாக கிராபிக்ஸ் பணிகள் நடந்துள்ளன.

2.0 படம் தயாரான வீடியோ காட்சிகளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இணையதளத்தில் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார்.

இந்த நிலையில், 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

You might also like More from author