Mar 16, 2017
7 Views
0 0

நரேந்திர மோடியின் மகள் நான் என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்

Written by
banner

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மகள் நான் என பிரபல நடிகை அவானி மோடி தெரிவித்துள்ளார்.

நான் ராஜாவாக போகிறேன், ஸ்ட்ராபெர்ரி போன்ற தமிழ்ப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர் அவானி மோடி.

இவர் பிரபல மொடலாகவும் திகழ்கிறார், இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என் பெயர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் மோடி என்ற வார்த்தை ஒற்றுமை உள்ளது.

அதனால் அவர் தான் என் தந்தை என கூறினார். பின்னர், நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள எல்லா பெண்களுக்கும் தந்தை என டக்கென சுதாரித்து அவானி மோடி பேச்சை மாற்றினார்.

நடிகை அவானி மோடிக்கு முதல் தமிழ் திரைப்பட வாய்ப்பு கிடைத்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி அவரை கடிதம் மூலம் வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Categories:
சினிமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *