நாகார்ஜூன் மகன் அகில் நிச்சயதார்த்தம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் இளைய மகன் அகிலின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் நாகார்ஜூனாவிற்கு நாகசைதன்யா, அகில் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் நாகசைதன்யாவிற்கு, நடிகை சமந்தாவுடன் திருமணம் நடைபெற இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

அகில் – ஸ்ரியா திருமணம் இத்தாலியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் திருமண தேதி வெளியாகும் என தெரிகிறது.

இதனிடையே நாகார்ஜூனாவின் இளைய மகனான அகில், ஸ்ரியா பூபால் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று அகில் – ஸ்ரியா பூபால் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. இதில் இருவீட்டாரது குடும்பத்தார் மற்றும் சினிமா துறையில் உள்ள மிக முக்கியமான நட்சத்திரங்கள் மட்டும் கலந்து கொண்டனர். கூடவே சமந்தாவும் இந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றார்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com