நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி,
வீடுகளுக்கு நேரடி விநியோகம், பெட்ரோல்,டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்.13 இல் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

You might also like More from author