நான் ரோபோ அல்ல., என் தோலை அறுத்து பாருங்கள் – விராட் கோலி ஆவேசம்..

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை ஆடிவருவதால் தனக்கும் ஓய்வு தேவை தான் ரோபோ அல்ல என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

2017-ல் மட்டும் விராட் கோலி 7 டெஸ்ட், 26 ஒருநாள் போட்டிகள் 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார், இந்திய அணியில் அதிகம் போட்டிகளில் ஆடியவராகத் திகழ்கிறார் விராட் கோலி.

“கண்டிப்பாக எனக்கு ஓய்வு தேவை, நான் ஏன் ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடாது. என் உடலுக்கு ஓய்வு வேண்டிய நேரம் வந்தால் நானும் ஓய்வு கேட்பேன், ஏன் கூடாது?, நான் ரோபோ அல்ல, என் தோலை அறுத்து எனக்கும் ரத்தம் வருகிறதா என்று பாருங்கள்

பணிச்சுமை என்பதை ஒருவரும் முறையாகச் சிந்திப்பதில்லை. பணிச்சுமை குறித்து வெளியில் நிறைய பேச்சு இருந்து வருகிறது, அதாவது வீரர் ஒருவருக்கு ஓய்வு அளிப்பதா கூடாதா என்று விவாதிக்கின்றனர்.

உதாரணமாக அனைத்துக் கிரிக்கெட் வீரர்களும் ஆண்டுக்கு 40 போட்டிகளில் ஆடுகின்றனர். ஓய்வு எடுக்க வேண்டிய 3 வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டும். அணியின் 11 வீரர்களில் அனைவரும் 45 ஓவர்கள் பேட் செய்வதில்லை, அனைவரும் 30 ஓவர்களை வீசுவதில்லை. ஆனால் இதனை ரெகுலராகச் செய்து வரும் வீரருக்கு ஓய்வு அளிப்பது அவசியம்.

கிரீஸில் எவ்வளவு நேரம் ஆடுகிறோம் என்பதை யாரும் பார்ப்பதில்லை. ரன்கள், ஓவர்கள், சூழ்நிலைகள் எல்லாம் இருக்கிறது. இதுகுறித்த ஆய்வுக்கு ஒருவரும் செல்வதில்லை. அனைவருமே எண்ணிக்கையில் கொஞ்சம் கணிசமாகவே போட்டிகளில் ஆடிவருகின்றனர்.

உதாரணமாக டெஸ்ட் போட்டிகளில் புஜாராவுக்கு பணிச்சுமை அதிகம், ஏனெனில் அவர் அதிக நேரம் களத்தில் நிற்கக் கூடியவர். இவரை அடித்து ஆடும் ஒரு வீரருடன் நாம் ஒப்பிட முடியாது.

இவற்றையெல்லாம் நாங்கள் பரிசீலிக்கக் காரணம், நாங்கள் 20-25 வீரர்கள் கொண்ட வலுவான ஒரு அணியை கட்டமைத்துள்ளோம். முக்கியத் தருணத்தில் முக்கிய வீரர்கள் களைப்பினால் சலித்து விடக்கூடாது. அணியின் முன்னேற்றத்துக்கு இத்தகைய சமனிலை நடவடிக்கைகள் அவசியம்.

என்னைப் பொறுத்தவரை 3 வடிவங்களிலும் அதே தீவிரத்துடன் ஆட முடியும் என்பது மனிதனால் செய்ய முடியக்கூடியதே” என்றார் விராட் கோலி.

You might also like More from author