Apr 12, 2017
4 Views
0 0

நாய், பூனைக்கறிக்கு தைவானில் தடை! மீறினால் இரண்டு ஆண்டு சிறை

Written by
banner

நாய் மற்றும் பூனைக் கறிக்கு தடைவிதிக்கும் வகையில் தைவான் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, நாய் அல்லது பூனையை கொல்பவர்களுக்கு இந்திய ரூபாய்க்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நாய்கறி உண்பது சாதாரண ஒரு விஷயமாக இருந்து வந்தது. ஆனால், சில ஆண்டுகளாக நாய்கறி மற்றும் பூனைக்கறி உண்பது குறைந்துள்ளது. சென்ற வருடத்தில் ராணுவ வீரர்கள் ஒரு நாயை இரும்பு சங்கிலியால் கழுத்தை நெரித்து கொல்லும் வீடியோ அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்துக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து அந்த ராணுவ வீரர்கள் மன்னிப்பு கேட்டனர். இத்தகைய சூழலில் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எண்ணம் மக்கள் மனதில் உருவாகத் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நாய்கறி மற்றும் பூனைக்கறிக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அந்தச் சட்டத்தின்படி, நாய்களைக் கொல்பவர்கள் அல்லது சித்ரவதை செய்பவர்கள் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், மீண்டும் மீண்டும் அத்தகையை செயலில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

Article Categories:
உலகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com