நாளை காலை உள்துறை அமைச்சகத்திடம் அவசர சட்ட வரைவு சமர்பிக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார். தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தால் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறிஉள்ளார். கிராமப்புற மாணவர்கள்  பாதிப்பார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.
இதனையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். மத்திய அமைச்சரின் பேட்டி தொடர்பாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாளை காலை உள்துறை அமைச்சகத்திடம் அவசர சட்ட வரைவு சமர்பிக்கப்படும். நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு என்ற அறிவிப்பு, மாநில அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என கூறிஉள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்ததையடுத்து முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நாளை மாலை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com