Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news பஞ்சாப்பா... புனேவா... களமிறங்கிய தமிழக வீரர் தங்கராசு நடராஜன்

பஞ்சாப்பா… புனேவா… களமிறங்கிய தமிழக வீரர் தங்கராசு நடராஜன்

இந்தூரில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும் புனே அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில், பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் டாஸ் வென்று பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில், இதுதான் பஞ்சாபுக்கு முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பஞ்சாப் அணிக்காக சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் விளையாடுகிறார்.

இவருக்கு ஐபிஎல் ஏலத்தின் போது, நடராஜனுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 10 லட்சம் ரூபாய். ஆனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அவரை 3 கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறது. நடராஜன் யார்க்கர்கள் போடுவதில் தேர்ந்தவர் என்பதால் அவரை பஞ்சாப் அணி தேர்வு செய்தது. சாதிக்குமா இந்த சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்… !

தொடக்கத்திலேயே புனே அணி இரண்டு விக்கெட்டுகள் இழந்து, 8 ஓவர் முடிவில் 48/2 என்ற நிலையில் ஆடி வருகிறது. தங்கராசு நடராஜன், தான் களமிறங்கிய முதல் போட்டியின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார்.

You might also like More from author