Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news பண வினியோகத்தை சீராக்க புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகும் - Naangamthoon

பண வினியோகத்தை சீராக்க புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகும்

மும்பை:

உயர்மதிப்பு கொண்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செல்லாது என்று அறிவித்தது.

அதற்கு பதிலாக ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் புதிதாக வெளியிடப்பட்டன. ஆனாலும் சில பகுதிகளில் பண வினியோகம் சீராக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2000 ரூபாய்க்கு சில்லரை பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

இதையடுத்து சில்லரை பிரச்சினையை தீர்க்க புதிய 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக வெளியிடப்பட்டன. 200 ரூபாய் நோட்டுக்களை ஏ.டி.எம்.களில் வைப்பதற்கு ஏற்ப எந்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் 200 ரூபாய் நோட்டுகள் இன்னும் சீரான புழக்கத்துக்கு வரவில்லை.

எனவே பணப்புழக்கத்தை சீராக்க புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பண வினியோகத்தை சீராக்க நாடு முழுவதும் புதிதாக 100 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சிடும்போது அதன் அளவில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. இதனால் வங்கிகள் தங்களது ஏ.டி.எம். எந்திரங்களில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை.

புதிய 100 ரூபாய் நோட்டுக்களை ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் மூலம் வங்கிகள் புழக்கத்தில் விடலாம்.

அதே நேரத்தில் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். அந்த நோட்டுக்கள் எந்த இடையூறுகளும் இன்றி படிப்படியாக புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author