May 20, 2017
27 Views
0 0

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இரட்டையர்கள் படைத்த சாதனை

Written by
banner

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

திருநெல்வேலியின் வள்ளியூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருபவர்கள் ஜோனிகா வளன், ஜோஷிகா வளன்.

இரட்டையர்களான இவர்கள் உருவ அமைப்பில் மட்டும் ஒற்றுமையை வெளிப்படுத்தாது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்(494) பெற்று தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர்களின் தாயார் கூறுகையில், சிறு வயதிலிருந்தே இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றதே கிடையாது.

இருவரும் நன்றாக படிப்பார்கள், அவ்வளவு தான். ஆனால், பொதுத்தேர்வில் இதுபோல ஒரு சாதனை படைப்பார்கள் என தான் நினைத்து கூட பார்த்ததில்லை என கூறியுள்ளார்

Article Categories:
தமிழகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *