பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் அமர வைக்க பாஜக முயற்சித்தது சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்

பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் அமர வைக்க பாஜக முயற்சித்தது என பாஜகவின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த நிலையில் அவரை மீண்டும் முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பாரதிய ஜனதா கட்சி அவரை மீண்டும் முதல்வராக்க முயற்சித்தது. மத்திய அமைச்சர்கள் சிலரும் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சித்தனர்.

ஆனால் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் விரும்புகின்றனர். ஆகையால் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன் என்று சுவாமி கூறியுள்ளார்.

You might also like More from author