Home சினிமா பராக்! பராக்! இம்சை அரசினின் ராஜபார்வை இன்று முதல்…

பராக்! பராக்! இம்சை அரசினின் ராஜபார்வை இன்று முதல்…

20
சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. முதல் முறையாக வடிவேலு இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூலையும் குவித்தது. இந்நிலையில், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது தயாராக இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய சிம்பு தேவனே இரண்டாவது பாகத்தையும் இயக்கவிருக்கிறார். வடிவேலு நடிக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த பாகத்திற்கு `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாகத்தை இயக்குநர் ஷங்கரும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில்,

“ராஜாதி ராஜ… ராஜ மார்த்தாண்ட… ராஜ கம்பீர… ராஜ குலுதிலக… ராஜ பராக்கிரம… ராஜ குலோத்துங்க… ராஜ வைராக்கிய… மாமன்னர்
பராக் பராக் பராக்…..

நாளை முதல் ராஜ பார்வை”

என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியானது. அதில் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.