பல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் இறுதி வரை நீட்டிப்பு

புதுடெல்லி:

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், வங்கிகணக்கு, பான் கணக்கு உள்ளிட்டவுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து மத்திய அரசு அறிவித்தது. இதற்கென காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

பான் கணக்கு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் எடுக்கப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக இந்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You might also like More from author