பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸில் வைகாசி விற்பனைக்கு பட்டு சேலை

திருவண்ணாமலை, மே.22:

திருவண்ணாமலை திருவூடல் தெருவில் உள்ள பவுர்ணமி
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வைகாசி மாத விற்பனைக்காக புதிய ரக
பட்டு சேலைகள் ஏராளமாக வந்துள்ளன. இதுகுறித்து விற்பனை நிலைய மேலாளர்
ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வைகாசி மாத சிறப்பு
விற்பனைக்காக சிறந்த வடிவமைப்புடன் கூடிய புதிய பட்டுப்புடவைகள்
விற்பனைக்கு வந்துள்ளன. ராஜாராணி டிசைன், சரித்திரா சேலைகள்,
சித்தன்னவாசல் சிற்ப கலையுடன் கூடிய பட்டுபுடவைகள், மணமகள் விரும்பும்
கல்பதிந்த பட்டுபுடவைகள், ஜக்கார்டு டிசைன் பட்டுபுடவைகள், மென்பட்டு
சேலைகள் என ஏராளமான ரகங்கள் விற்பனைக்காக வந்துள்ளன. ரூ. 2,800 முதல் ரூ.
60 ஆயிரம் மதிப்பிலான சேலைகள் உள்ளன. அனைத்து ரகங்களுக்கும் அரசு
சார்பில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம், ஆரணி,
சேலம், கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஆகிய பகதிகளை சேர்ந்த கைத்தேர்ந்த பட்டு
நெசவாளர்களை கொண்டு முகூர்த்த பட்டுசேலைகள், அசல் பட்டு, அசல் ஜரிகை
சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மங்கையரின் மனம் கவரும் மங்கலகரமான
பட்டுசேலைகள் நியாயமான விலையில் அரசு தள்ளுபடியுடன் விற்பனை
செய்யப்படுகிறது. மேலும் பருத்தி புடவைகள், சேலம், நெகமம், கோவை, மதுரை,
பரமக்குடி போன்ற ஊர்களில் கலைநயத்துடன்கூடிய காட்டன் புடவைகளும், இளம்
வயதினர் விரும்பும் சுடிதார், நைட்டிகள், ரெடிமேட் சர்ட்டுகள் மாப்பிள்ளை
செட், குட்டீஸ் விரும்பம் கார்டூன் படுக்கை விரிப்புகள், திருக்குறள்
முதல் சங்க இலக்கியம், சாலை விழிப்புணர்வு அறிவியல் கண்டுபிடிப்பு என
அனைத்து வகைகளும் இருப்பு உள்ளன என்றார்.

You might also like More from author