Feb 20, 2017
9 Views
0 0

பாடையில் கொண்டு செல்லப்பட்ட இளைஞர் திடீரென எழுந்துக் கொண்ட்டார்

Written by
banner

ஹூப்ளி, தர்வார் பகுதி அருகே உள்ள மனகுன்டி கிராமத்தில் பாடையில் கொண்டு செல்லப்பட்ட இளைஞர் திடீரென எழுந்துக் கொண்ட சம்பவம் உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குமார் மர்ரேவாத் (17), என்பவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாய் கடியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அதிக காய்ச்சல் காரணமாக தர்வார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது நிலை மோசமானதை அடுத்து, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், குமார் பிழைப்பது கடினம் என்றாகிவிட்ட சூழலில், குமார் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்ட குமாரின் உடலில் எந்த அசைவும் இல்லாததால், அவரது உறவினர்கள் குமார் இறந்துவிட்டதாக முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து குமாருக்கு இறுதிச்சடங்கு நடத்த கிராம நிர்வாகிகளிடம் பேசி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. குமாரின் வீட்டில் இருந்து மயானத்திற்கு செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், சுடுகாட்டிற்கு அருகில் சென்றபோது குமார் திடீரென விழித்துக் கொண்டு, கை, கால்களை அசைத்து வேகமாக மூச்சுவிடத் தொடங்கினார்.

இதனால் பதட்டம் அடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனடியாக கோகுல் ரோடு சாலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Article Categories:
தமிழகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *