பாம்பாறு ஆக்ரமிப்பினை அகற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை, மார். 9:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா
அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆர்டிஓ உமாமகேஸ்வரி
தலைமையில் தாலுக்கா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சஜேஸ்பாபு
வரவேற்றார். டிஆர்எஸ் தாசில்தார் மகேந்திரமணிதுணைதாசில்தார் மனோகரன்
முனானிலை வகித்தார். கடந்த மாத கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது
எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டது. அனைத்து துறை
அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
கட்டத்தில் தண்டராம்பட்டு பனனீர்செல்வம்சின்னியம்பட்டை ஆனந்தன்,சாத்தனூர்
ஏழுமலை,பேராயம்பட்டு ஜனார்தனன்,வாழவச்சனூர் அண்ணாமலை, தரடாபட்டு யுவராஜ்
மனோகரன்,பெருங்குளத்தூர் சொக்கலிங்கம்மேல்கரிப்பூர் பழனிவேல் உள்ளிட்ட
விவசாயிகள் தண்டராம்ட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவ,மாணவிகளுக்கு விடுதி கட்ட இடம் தேவை, விஏஓவிடம் இருந்து சிட்டா
வாங்க முடியவில்லை,சின்னியம்பேட்டை பள்ளி கட்டிடம் மற்றும் சாலைகளை
புதுபிக்கவேண்டும், பாம்பாற்றில் உள்ள ஆக்ரமிப்புக்களை அகற்ற
வேண்டும்,சர்வேயர் நிலத்தை அளந்து தருவதில்லை,ஏரி ஆக்ரமிப்புக்களை அகற்ற
வேண்டும்,குடிநீர் பிரச்சனைக்கு முடிவு எடுக்க வேண்டும்,விவசாயிகளுக்கு
சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும்,
பிடிக்கப்படும் இன்சூரன்ஸ் பணம் பெற்று தர வேண்டும், முதியோர்
பென்ஷன்,இலவச அரிசி, நூறு நாள் வேலை சம்பளம் ஆகியவை
கிடைக்கவில்லை,குடும்ப அட்டைக்கு பணம் வசூலிப்பதை தடுக்க
வேண்டும்,தெருவில் தேங்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும்,தவறாக செய்த பட்டா
மாற்றத்தை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள்
கூறினர்.

You might also like More from author