பிக்பாஸ் ஓவியாவிற்கு சிம்புவின் ட்விட்டர் பதிவு உண்மையா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவிற்கு இந்த அளவுக்கு புகழ் கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். குறிப்பாக விஜய் டிவி இதனை எதிர்பார்க்கவில்லை.

இதனால் ஓவியாவை வெளியேற்ற விஜய் டிவி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை, ஓவியா நற்பணி மன்றம் என பட்டியல் நீண்டு போகிறது. பல திரைப்பிரபலங்களும் ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக ஹாலிவுட் பட வாய்ப்பும் வந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு கூட ஓவியாவிற்குதான் தனது ஆதரவு என தெரிவித்து உள்ளார். இதற்கெல்லாம் மேலாக, ஓவியா போல ஒரு பெண் கிடைப்பது அரிது. என்னை விட்டால் நான் ஓவியாவை திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன்.

ஓவியா வெளியே வந்தால் புரபோஸ் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறி உள்ளார். இது சிம்புவின் போலி ட்விட்டராக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையான ட்விட்டர் கணக்கா இல்லை போலியா என்பது தெரியவில்லை. இதற்கு சிம்புவே விளக்கம் சொன்னால்தான் சரியாக இருக்கும்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com