ஆரவ் ஓவியாவுக்கு கொடுத்த முத்தம் இது தான் என புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ முத்தம் என்னும் வார்த்தை சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் நடிகர் கமல் அனைத்து போட்டியாளர்களையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

அதிலும் நடிகை ஓவியாவிற்கு முத்தம் கொடுத்ததை ஆரவ் தனது வாயாலே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு கமல் கண்டிப்புடன் நடந்து கொண்டு, ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார்.

இதனையடுத்து மருத்துவ முத்தம் என்னும் வார்த்தை சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும் பிரபல ரிவி ஏன் ஆரவ் செய்த தவறை அனைவரது முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஆரவ் ஓவியாவுக்கு கொடுத்த முத்தம் இது தான் என புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, ஆனால் இது குறித்த உண்மைத்தன்மை தெரியவில்லை.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com