பிடிஓ ஆபீசில் அளிக்கப்படும் மனுகள் மீது நடவடிக்கை இல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை, மே 3:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் நடைபெற்ற
விவசாயிகள் கூட்டத்தில் பிடிஓ ஆபீசில் விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள்
மீது நடவடிக்கைகள் எடுப்பதிலலை என குற்றசாட்டினை விவசாயிகள் கூறினார்கள்.
தண்டராம்பட்டு தாலுக்கா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்ட்ம்
தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் ச ஜேஷ்பாபு தலைமையில் நடந்தது. சமூக
பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகேந்திரமணி வரவேற்றார். கூட்டத்தில் சென்ற
மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
விளக்கப்பட்டது. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அபபகுதி விவசாயிகள் பேசியதாவது: ஊராட்சி
செயலர்கள் பல வருடங்களாக ஒரே இடத்தில் பணி புரிவதால் பல தவறுகள்
நடக்கின்றன. தண்டராம்பட்டு,தரடாபட்டு மற்றும் கரிப்பூர் ஏரிகள்
தூர்வாரப்படவேண்டும்,சேரந்தாங்கள் கிராமத்தில் முதியோர் ஓய்வூதியத்திற்கு
பணம் வசூலிக்கப்படுகிறது. யூனியன் ஆபீசில் விவசாயிகள் சார்பில்
கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும்
எடுப்பதில்லை.கரிப்பூரில் தனிநபர் கழிப்பறை கட்டாமலே பணம்
வழங்கப்படுகிறது.சென்ற வருடம் கட்டிய பயிர் இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா?
பெருங்குளத்தூரில் ள்ள கால்நடை மரத்துவமனையில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்ற
வேண்டும். கொட்டையூரில்  நூறு நாள் வேலை தருவதில்லை என பேசினார்கள்.

You might also like More from author