Dec 19, 2016
2 Views
0 0

பிரதமர் மோடி – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

Written by
banner
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இன்று  பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டில் ‘‘வார்தா’’ புயலினால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்க கோருவதோடு, தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘‘பாரத ரத்னா’’ விருது அளிக்க வேண்டியும், ஜெயலலிதாவுக்கு முழு திருவுருவ வெண்கலச்சிலையை பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கவும் கோரி கடிதங்களை அளிக்க உள்ளார். பின்னர் இன்றே முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.

 

Article Categories:
தமிழகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com