பிரபல நகைச்சுவை நடிகர் தவக்களை சென்னையில் இன்று காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் தவக்களை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் இன்று காலமானார்.

இயக்குனர் கே. பாக்கியராஜ் 1983ல் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படம் மூலம் அறிமுகமானவர் தவக்களை.

அதனைத்தொடர்ந்து காக்கிசட்டை உட்பட பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், நெஞ்சுவலி காரணமாக இன்று காலை வடபழனியில் உள்ள வீட்டில் உயிரிழந்தார்.

You might also like More from author