பிரித்தானியாவில் இடம்பெற்ற கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் இளம் வீரர் உயிரிழந்தார்

பிரித்தானியாவில் இடம்பெற்ற கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மேடையிலே உருக்குலைந்து இளம் வீரர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹில்ஸ்போரோ பகுதியை சேர்ந்த 14 வயதான ஸ்காட் மார்ஸ்டன் என்ற இளம் வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை இடம்பெற்ற கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஸ்காட் மார்ஸ்டன் இறுதி விநாடியின் போது மேடையிலேயே உருக்குலைந்து விழுந்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

போட்டியின் போது அவர் நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்வு அமைப்பாளர்களான லீட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் கல்லூரி இளைஞன் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர்.

ஸ்காட் மார்ஸ்டன் நண்பர்களும், குடும்பத்தினரும் நெஞ்சை உருக்கும் அஞ்சலி வெளியிட்டுள்ளனர்.

இளம் வீரராக திகழ்ந்த ஸ்காட் மார்ஸ்டன், தன் நேர்மறையான பேச்சால் சந்தித்த அனைவரையும் கவர்ந்ததாக பாராட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து வெஸ்ட் யார்க்ஷயர் பொலிஸ் கூறியதாவது, சந்தேகக் கண்ணோடு இச்சம்பவத்தை அணுகவில்லை என தெரிவித்துள்ளனர்.

You might also like More from author