பிள்ளைகளின் கனவுகளுக்கு பெற்றோர் இடம் கொடுக்க வேண்டாம் கல்வியாளர் பெருமாள் மணி பேச்சு

திருவண்ணாமலை, மார்ச்.28:

திருவண்ணாமலை வேங்கிக்கால் குமரன் மஹாலில்
எஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பில் எஸ்கேபி வனிதா இண்டர்நேஷனல் பள்ளி
(சிபிஎஸ்இ), எஸ்கேபி வனிதா வித்யாலயா (மெட்ரிக்) பள்ளிகள் தொடங்கப்படுவதை
முன்னிட்டு நம் குழந்தைகளின் கல்வி எதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்ற
தலைப்பில் கல்விமுறை வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. இந்த
கருத்தரங்குக்கு கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.கே.பி. கருணா தலைமை
தாங்கினார் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தொலைகாட்சி
நிகழ்ச்சி விமர்சகரும் கல்வியாளருமான பெருமாள் மணி பேசும்போது
பிள்ளைகளின் படிப்பை நாம்தான் தீர்மானிக்கவேண்டும் அதேபோல பிள்ளைகளின்
கனவுகளுக்கு பெற்றோர் இடம் கொடுக்க வேண்டும். சிபிஎஸ்இ, மெட்ரிக் இரண்டு
பாட திட்டங்களும் ஒன்றுதான். சிபிஎஸ்இ படிப்பு கடினமாக இருக்கும்.
மெட்ரிக் படிப்பு மிதமாகஇருக்கும் ஒரு மாணவனுக்கு அறிவும், திறமையும்தான்
வெற்றியை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து
பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கு எஸ்கேபி கல்வி குழுமத்தின் தலைவர்
எஸ்.கே.பி. கருணா, கல்வியாளர் பெருமாள் மணி ஆகியோர் பதிலளித்தனர். இந்த
கருத்தரங்கில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி
குழந்தைகள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

You might also like More from author