மே 1-ம் தேதி புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கார்கள் மீது சிவப்பு விளக்கு பொருத்த தடை விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய நபர்கள் கார்கள் மீது சிவப்பு விளக்கை எரிய விட்டு செல்வதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்துள்ளது.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை முற்றிலும் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து நிதியமைச்சரான அருன் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட எந்த வாகனனும் மே 1-ம் திகதி முதல் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படாது. இதில் எவ்வித விதிவிலக்குகளும் இல்லை.

எனினும், அவசர வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் போலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்கு மட்டும் நீல நிற விளக்குகளை பயன்படுத்து அனுமதி அளிக்கப்படும்’ என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டம் மூலம் நாடு முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து வி.ஐ.பிகளுக்கும் சிவப்பு விளக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

‘நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் முக்கியமானவர்கள். ஒவ்வொரு குடிமகனும் வி.ஐ.பி தான்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற ஏற்ற தாழ்வுகளை தவிர்க்கவும் மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author