புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்!

புதுச்சேரியில் 4 நாட்களுக்குப் பிறகு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் முதற்கட்டமாக நாகர்கோவில், குமளி பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்த நிலையில், நிரந்தர தொழிலாளர்களை வைத்து பேருந்துகள் தற்போது இயக்கப்படுகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களை தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்த வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக புதுச்சேரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com