பெற்றோரை கட்டி வைத்த மகனின் வெறிச்செயல்!

மது அருந்த பணம் தராத பெற்றோரை கயிற்றால் கட்டி வைத்து பெற்ற மகனே அடித்து உதைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தின் பெரியகுளம் பகுதியில் வசித்து வருபவர் மணிக்கட்டி. இவரின் மனைவி ஈஸ்வரி.

இவர்கள் கூலி வேலை செய்து வந்தார்கள். இவர்களுக்கு மொத்தம் நான்கு மகன்கள் உள்ளார்கள். இதில் நான்காவது மகனின் பெயர் கார்த்திக் ராஜா.

குடிக்கு அடிமையான இவர் வேலை எதற்கும் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்ததோடு , அடிக்கடி மது அருந்த தனது பெற்றோரிடம் பணம் கேட்டு சண்டை போடுவது வழக்கமாகும்.

அதே போல நேற்றும் கார்த்திக் ராஜா தன் பெற்றோரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் தந்தை மணிகட்டி மற்றும் தாய் ஈஸ்வரியின் கை, கால்களை அவர் கட்டி போட்டுள்ளார்.

மேலும் அவர்களை கார்த்திக் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவரும் சத்தம் போட்டுள்ளனர். அவர்கள் குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் மீட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பொலிசார் கார்த்திக் ராஜாவை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author