பெற்றோர்களிடம் கூறி அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள் சப் கலெக்டர் பேச்சு

தேசிய வாக்களர் தினவிழா விழிப்புணர்வு  ஊர்வலம்

இரண்டு வருடம் வாக்களிக்காத தனது அத்தையை கடந்த தேர்தலில் வாக்களிக்க ஊக்க படுத்தி வாக்களிக்க செய்த ஆறாம் வகுப்பு மாணவிக்கு சப் கலெக்டர் பாராட்டு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின ஊர்வலத்தை தேவகோட்டை சப் கலெக்டர் துவக்கி வைத்தார்.

தேசிய வாக்களர் தின விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை வட்டாச்சியர் மங்களேஸ்வரி,நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை சப் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய வாக்காளர் தின ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசுகையில் , மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அனைவரையும் வாக்களிக்க சொல்ல வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

கடந்த ஆண்டு நான் இங்கு வந்தபோது வாக்களிப்பதன் நோக்கத்தை எடுத்து கூறியதை இப்பள்ளியில் காயத்ரி என்கிற மாணவி அவர்களது பக்கத்து வீடுகளில் எடுத்து சொல்லி இரண்டு வருடம் வாக்களிக்காத தனது அத்தையை கடந்த தேர்தலில் வாக்களிக்க ஊக்க படுத்தி வாக்களிக்க செய்ததாக கூறினார்.இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றி ஆகும்.மாணவியை பாராட்டுகிறேன். இதே போன்று அனைவரும் தங்களின் வீடுகளின் அருகில் சொல்லி வாக்களிக்க சொல்லி , வாக்கு சதவிகித்தை அதிகபடுத்துங்கள்.நீங்களும் 18 வயது வந்த உடன் அனைவரும் கண்டிப்பாக வாக்களியுங்கள்.

மாணவி காயத்ரியை  இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைக்க சொல்கிறேன் என்று பேசினார். ஊர்வலம் தேவகோட்டையில் இரவு சேரி பாதை, வைத்தியலிங்கம் தெரு,நடராஜபுரம் முதல் தெரு,செப்பவயாளர் தெரு,நேரு தெரு,சின்னம்மாரியம்மன் கோவில் தெரு,ஜெயம்கொண்டார் தெரு,மு.மா.அள.தெரு உட்பட பல்வேறு தெருக்களின் வழியாக  வாக்களர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி,விழிப்புணர்வு கோஷங்களுடன் சென்று பள்ளியை அடைந்தது.விழாவில் துணை தாசில்தார் சேது நம்பு, தேர்தல் பிரிவு எழுத்தர் ராஜேந்திரன்,கிராம நிருவாக அலுவலர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழா நிறைவாக நகராட்சி தேர்தல் பிரவு எழுத்தர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின ஊர்வலத்தை தேவகோட்டை சப் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்  துவக்கி வைத்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளார்.

You might also like More from author