பைக் மரத்தில் மோதி ஒருவர் பலி

திருவண்ணாமலை, மே 20:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே
பைக்கில் சென்றவர்கள் மரத்தின்மீது மோதியதில் பரிதாபமாக ஒருவர்
உயரிழந்தார் மற்ற ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார். தண்டராம்பட்டை சேர்ந்த சுந்தரேசன் மற்றும் சூரியா ஆகியோர்
திருவண்ணாமலையில் ஒரு ஜவுளி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி
வருகிறார்கள். கடந்த 16ந் தேதி தங்களது வேலையை முடித்துவிட்டு
தண்டராம்பட்டிலுள்ள தங்களது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென நிலை தடுமாறி பைக் அருகிலுள்ள மரத்தில் மோதியதில்
இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த அடிபட்டனர். உடனடியாக அக்கம்
பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுந்தரேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறிதது சூரியா தண்டராம்பட்டு போலீசில் அளித்த புகாரின்பேரில் எஸ்.ஐ.
உதயசூரியன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

You might also like More from author