‘பைரவா’வுக்கு வரவேற்பு எப்படி?

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பைரவா’.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியாயுள்ள இப்படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீக்ரீன் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும், படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தின் முந்தைய விஜய் படங்களின் சாதனையை முறியடிக்கும் என்று தகவல் வெளியானது.

‘பைரவா’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த சூழலில், ஸ்ரீக்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக முதல் நாள் வசூலை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது.

‘பைரவா’ முதல் நாளில் ரூ.16.61 கோடி வசூல் செய்துள்ளது. ‘தெறி’ படத்தின் முதல்நாள் வசூலைவிட, ‘பைரவா’ முதல் நாள் குறைவுதான் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

மேலும், ‘பைரவா’ படத்தின் காட்சிகளில் சுமார் 7 நிமிடத்தை படக்குழு குறைத்துள்ளது.

பொங்கல் விடுமுறை தினங்கள் முடிந்தவுடன் இருக்கும் வசூலைப் பொறுத்துதான் படம் வெற்றியா, தோல்வியா என்பது தெரியவரும்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com