பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 58 எழுத்தாளர்கள் நியமனம்

திருவண்ணாமலை, பிப். 28:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்
தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 58 எழுத்தாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார்
தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 2ந்
தேதி தொடங்கி மார்ச் 31ந் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுக்கு இன்னும் 2
நாட்களே உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுத் தேர்வுக்கான
அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவடைந்து தேர்வு மையங்கள் தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் மாணவர்கள் முறைகேடான
செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை மற்றும் போலீஸ்
பாதுகாப்புகளும் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2
பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை
வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு
எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும்
தேர்வு மையத்தில் அமைக்கப்படடுள்ளது மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு
எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளில் தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு உதவியாக
58 எழுத்தர்கள் (ஸ்கிரைப்) பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com